என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்"
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது. திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதற்காக திருப்போரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் ‘பூத்’ வாரியாக வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் உள்ளபடி வாக்காளர்கள் உள்ளார்களா? அல்லது முகவரி மாறி சென்று விட்டார்களா? என்று சரி பார்த்து வருகின்றனர். ஆனால், கஜா புயல் பாதித்த தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் எந்த கட்சியினரும் ஈடுபட வில்லை.
எனவே இடைத்தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனப்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அப்படி தேர்தல் நடத்தும் போது அந்த மாநிலத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டிருந்தால் தேர்தல் நடத்தும் உகந்த சூழல் உள்ளதா? என்று மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம்.
ஏனென்றால் அவர்கள் தான் கிராமம் கிராமமாக வாக்குச்சாவடியை அமைத்து தர வேண்டும். அரசு ஊழியர்களை ஒதுக்க வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் 12 மாவட்டங்களில் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட கலெக்டர்கள் புயல் நிவாரண பணிகளில் தான் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களும் அந்த பணியில் தான் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் திடீரென இடைத்தேர்தல் தேதியை அறிவித்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் கிடைக்காமல் போய்விடும். எனவே அந்த தவறை தேர்தல் கமிஷன் செய்யாது.
இடைத்தேர்தல் என்றாலே மாநில அரசிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும். அந்த வகையில் நாங்கள் தமிழக அரசுக்கு விரைவில் கடிதம் எழுதி கேட்க உள்ளோம். அவர்கள் தரும் பதிலை பொறுத்து தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். அதன்பிறகு தான் அந்த பணிகளில் இருந்து ஓரளவு விடுபட முடியும்.
இப்போது டெல்டா மாவட்டங்கள் போர்க்களம் போல் சிதைந்து சின்னா பின்னமாகி கிடக்கிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தலாம் என்று நாங்கள் அனுமதித்தால் அனைத்து பணிகளும் முடங்கிவிடும்.
எனவே இப்போது தேர்தல் வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு விரைவில் கடிதம் எழுத இருக்கிறோம்.
அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி. தினகரன் கட்சியை தவிர மற்ற கட்சிகள் தற்போதைய சூழலில் இடைத்தேர்தலை விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை செலவு செய்ய வேண்டி வரும்.
பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் அலைச்சல், செலவு மிச்சமாகும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட ஆரம்பித்துள்ளனர். #gajacyclone #byelection
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-
இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்து வருகிறார். அவரவர் கட்சிகள் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். இரட்டை இலை ஜெயிக்கும்.
8 தொகுதி வெற்றி பெற்றால் போதும் என பத்திரிக்கையில் வெளியானது. எங்கள் இலக்கு 20 தொகுதி என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர். இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
தினகரன்-மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. நான் பார்க்க வில்லை. தினகரன் வந்தால் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் அ.தி.மு.க. வில் உள்ளவர்களை அழைத்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லி விட்டோம்.
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. துணை போகிறதா? என்று பலரும் கேட்கின்றனர். நாட்டை ஆளுவது பா.ஜனதா தான். பிரதமர் நரேந்திர மோடி தான்.நிதி வேண்டும் என்றால் அமெரிக்க அதிபரையா பார்க்க முடியும்? மாநிலத்துக்கு எது தேவை என்றாலும் மோடியிடம் தான் கேட்க வேண்டும். எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது. அ.தி.மு.க- தி.மு.க. தான். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். மற்றவைலெல்லாம் கட்சியாக இருக்கும் களத்தில் இருக்காது.
கமல்ஹாசன் 20 தொகுதிகளிலும் களம் இறங்குவாரா? என்பது தெரியாது. அவர் பாவம் அவரை விட்டுவிடுங்கள். ரஜினி ஆடியோ வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சுருவோம் என தெரிவித்துள்ளார். நாங்களும் அதையே சொல்கிறோம். கரெக்டா அடிச்சுருவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk
திருவாரூர்:
திருவாரூரில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய கனவு கண்டார். அதனால் நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணினார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பிறர் கேலி செய்யும் அளவிற்கு போய் விட்டது.
ஸ்டாலின் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஸ்டாலினின் கனவுக்கு துணை போனவர் டி.டி.வி.தினகரன். ஸ்டாலினும் தினகரனும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கூட்டாக சேர்ந்து சதி செய்தனர். அவர்கள் இருவர் கண்ட கனவும் பலிக்கவில்லை. இனியும் ஒரு போதும் பலிக்காது.
18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிக் கொண்டிருந்த தினகரனுக்கு ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுயலாபத்திற்காக 18 பேரின் அரசியல் வாழ்க்கையை வீணடித்தவர் தினகரன். அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.
தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த பகுதி மக்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த 2 தொகுதி மட்டுமல்ல, 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar
பீளமேடு:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-
18 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த காலதாமதமாகும்.
எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் , உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சொல்லி தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார், இதன் மூலம் இடை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்பது தெளிவாகிறது.
மு.க.ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசியிருப்பதை கண்டிக்கிறேன்.
இது போன்ற தரம் தாழ்ந்த தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது.
எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரீகமாக பேசுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #admk #byelection
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் என்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் வரவேற்று பேசினார்.
முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தர்ராஜ், நகர்மன்ற துணை தலைவர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே கனவுகளுடன் இருந்து வருகிறார்.
ஏழைக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.
முதல்-அமைச்சர் மீது தி.மு.க. போடப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.- டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொண்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.
இவ்வாறுஅவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜிஆர், மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் (மேற்கு) தமிழ் கண்ணன் (கிழக்கு) கோட்டூர் ஜீவானந்தம் (தெற்கு), ராஜா சேட் (வடக்கு), நீடாமங்கலம் அரிகிஷ்ணன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார். #ministerkaramaj
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூற பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இங்கே திரண்டுள்ள பெண்களை பார்க்கும்போது மகளிர் மாநாடு போல இருக்கிறது. தமிழகம் தற்போது 19 அரசு துறைகளில் தலைசிறந்து விளங்கி வருகிறது.
1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முதல் வெற்றியை தந்தது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். இது போன்ற ஒரு வெற்றியை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் பெற வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பலகட்ட தேர்தல்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் மழை அல்ல. அ.தி.மு.க.வால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் அந்த கட்சி ஜெயிக்கப்போவதில்லை.
காரணம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி அல்ல இது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திணிக்கப்பட்டவர்கள். மக்கனால் அவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை ரகசியமாக சந்தித்ததை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இருக்கிறார்கள். ஏன் சந்தித்தார்கள் என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
அவர்களால் ஒன்றாக பணியாற்றவும் முடியவில்லை. எதையும் எதிர் கொள்ள தைரியம் வேண்டும். எங்காவது, ஏதாவது உதவி கிடைக்குமா? என்று ஒவ்வொருவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நுழைய பார்க்கிறது பா.ஜனதா. நேரடியாக வர முடியா விட்டாலும், பின்வாசல் வழியாக புகுந்துவிட ஆசைப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Khushboo #ElectionCommission
சென்னை:
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.
இதேபோல் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்பதால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதாலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தீவிரமாக பெய்யும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதில் இயல்பை காட்டிலும் பருவ மழை அதிக அளவில் பெய்யும் என்றும் சராசரி அளவைவிட 112 சதவீதம் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பருவ மழை காலங்களில் வழக்கத்தைவிட பெருமழை பெய்து வருகிறது.
திருவாரூர் தொகுதி காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. பருவ மழை காலத்தில் இங்கு பலத்த மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அரசு எந்திரங்கள் மழை நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இந்த கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் பணியாற்றுவது அரசு அதிகாரிகளுக்கு இயலாததாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையிட்டது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஐகோர்ட்டு அதிகாரத்தை மீறிய செயலாகும். எனவே வழக்கு முடிவுக்கு வரும்வரை இங்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு தலைமைச் செயலாளர் கடிதத்தில் கூறியுள்ளார். #ElectionCommission #TNgovernment #ADMK
மதுரை:
வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய் இருக்கும்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது அவதூறு பேச்சுகளை நிறுத்தி இருப்பார். மழை காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju
மதுரை:
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
எனவே மழை நேரத்தில் அரசு எந்திரங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. அதை கருத்தில் கொண்டுதான் மழை நேரத்தில் தேர்தல் வேண் டாம் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனவே மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தள்ளிவைப்புக்கு பலர் பல காரணங்களை திரித்து கூறுவார்கள். அதையெல்லாம் கருத்தில் கொண்டால் மக்கள் நலன் காக்க முடியாமல போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Jawahirullah
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.
தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.
தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்